Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடிக்க போவது இவரா?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடிக்க போவது இவரா?

-

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் நடிகர் அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடிக்க போவது இவரா?இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதே சமயம் இந்த படம் 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அதன்படி முதலில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடிக்க போவது இவரா?பின்னர் தற்போது கிடைத்த தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இருந்து குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ