Homeசெய்திகள்சினிமாவழக்கமான கதைதானா?.....விஷாலின் 'மதகஜராஜா' ட்ரெய்லர் எப்படி இருக்கு?

வழக்கமான கதைதானா?…..விஷாலின் ‘மதகஜராஜா’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

-

- Advertisement -

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜராஜா படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.வழக்கமான கதைதானா?.....விஷாலின் 'மதகஜராஜா' ட்ரெய்லர் எப்படி இருக்கு?

நடிகர் விஷால், ரத்னம் திரைப்படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி 2, இரும்புத்திரை 2, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக விஷால் நடிப்பில் மதகஜராஜா எனும் திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை சுந்தர். சி இயக்க ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. காமெடி கலந்த கதைக் களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது என படக் குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்காக ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் நன்றாக இருந்தாலும் ஆனால் ட்ரைலரை பார்க்கும்போது இப்படம் வழக்கமான கதை போல் தெரிகிறது. இருப்பினும் இந்த படம் எந்த அளவிற்கு வெற்றி அடையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MUST READ