Homeசெய்திகள்சினிமாஸ்குவிட் கேம் பாகம் 2 தயார்... ரிலீஸ் அப்டேட் இதோ...

ஸ்குவிட் கேம் பாகம் 2 தயார்… ரிலீஸ் அப்டேட் இதோ…

-

ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ள நிலையில், ரிலீஸ் குறித்த அப்டேட் வௌியாககி உள்ளது.

கொரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் ஏராளமான இணைய தொடர்களும், புகைப்படங்களும் வெளியாகின. தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்கள் ஓடிடி தளத்திற்கு வந்தன. இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமன்றி, ஹாலிவுட் தொடர்களிலும் மக்கள் ஆர்வம் செலுத்த தொடங்கினர்.

அந்த வகையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான தொடர் தான் ஸ்குவிட் கேம். ரெட் லைட், கிரீன் லைட் என்று பரபரப்புகளுடன் கூடிய தொடராக இது உருவானது. ஸ்குவிட் கேம் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானதை தொடர்ந்து, அதனை மையப்படுத்தி ஏராளமான ரீல்ஸ்களும், வீடியோக்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன. 9 எபிசோடுகளைக் கொண்ட இந்த இணைய தொடரில், ஒவ்வொரு எபிசோடும் 18 கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்டது. ‘ஸ்க்விட் கேம் ‘ தொடரை உருவாக்க மொத்த செலவு சுமார் 180 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த தொடர் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்தது.

இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கின்றனர். மேலும், இந்த இரண்டாம் பாகம் 4 பிரிவுகளாக, உருவாகி இருக்கிறது. முதல் இரண்டு பிரிவுகள் ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், மீதமுள்ள தொடர் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், தொடரின் புகைப்படங்களும் இணையத்தில் வௌியாகி உள்ளன.

MUST READ