இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கோட். மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளும் வெளியாகி இருந்த இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின்னர் இந்த படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார் விஜய். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 300 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது கோட். இந்த படத்தில் ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், திரிஷா போன்றோர்களின் கேமியோ இடம்பெற்று இருந்தது ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் தந்தது.
அதேசமயம் அஜித், தோனி, சூர்யா ஆகியோர்களின் குறியீடுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எனவே ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்தினை தளபதி திருவிழாவாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக திரிஷாவும், விஜயும் நடனமாடும் பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதில் கில்லி படத்தில் இடம்பெற்று இருந்த அப்படி போடு பாடலின் ஸ்டெப்பை ரீ கிரியேட் செய்திருந்தனர். அது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொண்டது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
#Trisha expressed her wish to have a “Apadi Podu” kind of song in #LEO2 , So I took it seriously and placed one song in #TheGreatestOfAllTime 😄pic.twitter.com/SSpu4559uG
— Kolly Corner (@kollycorner) September 13, 2024
அதாவது, “லியோ 2 திரைப்படத்தில் அப்படி போடு என்ற பாடல் வேண்டுமென திரிஷா விருப்பப்பட்டார். எனவே நான் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு அது மாதிரி பாடல் ஒன்றை கோட் படத்தில் வைத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.