தமிழ் சினிமாவில் மணிகண்டன் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். அதே சமயம் இவர், விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் இன்றுவரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதைத்தொடர்ந்து இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் மணிகண்டன். அடுத்தது இவர், மீண்டும் குடும்பஸ்தன் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்த மணிகண்டன், புதிய படம் ஒன்றை தானே இயக்கி, நடிக்க உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் நடந்த பேட்டியில் தனக்கு ஹாரர் படங்கள் என்றால் பயமாக இருக்கும் என கூறியுள்ளார்.
“I am very scared of Horror Films. After watching Annabelle i couldn’t even able to sleep😂. I know these elements won’t exists eventhough I’m scared. Even I don’t believe in spirituality. But my first film as writer was Pizza2✍️”
– #Manikandanpic.twitter.com/ctV7SRjNV1— AmuthaBharathi (@CinemaWithAB) June 3, 2025
அதாவது அனபெல் என்ற படத்தை பார்த்த பிறகு தனக்கு தூக்கமே வரவில்லை எனவும், அந்த அளவிற்கு ஹாரர் படங்கள் என்றால் பயமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் சிறு வயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இல்லை எனவும் கூறியுள்ளார். அத்துடன் ஹாரர் படங்கள் எடுக்க விரும்புவதாகவும், ஆனால் படம் பார்க்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.