Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' பட முக்கிய அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ பட முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' பட முக்கிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். அதே சமயம் இவர், போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று இருந்தது. மேலும் இவர் தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' பட முக்கிய அறிவிப்பு! தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு எல்ஐகே என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது.

அதன்படி இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாகும் என நம்பப்படுகிறது. அடுத்தது இப்படம் 2025 செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ