spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம் பிரபு, விதார்த் கூட்டணியின் 'இறுகப்பற்று'..... ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

விக்ரம் பிரபு, விதார்த் கூட்டணியின் ‘இறுகப்பற்று’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

-

- Advertisement -

இறுகப்பற்று திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் இறுகப்பற்று எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத், மற்றும் விதாரத்துக்கு ஜோடியாக அபர்னதி நடித்துள்ளார். மேலும் ஶ்ரீ, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன் எழுதி, இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜஸ்டின் பிரபாகரன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கோகுல் பினாய் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

we-r-hiring

சில நாட்களுக்கு முன்பாக இறுகப்பற்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் கான்செப்ட் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ