Homeசெய்திகள்சினிமாகைவிடப்பட்டதா இந்தியன் 3?..... சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய தகவல்!

கைவிடப்பட்டதா இந்தியன் 3?….. சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய தகவல்!

-

- Advertisement -

இந்தியன் 3 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.கைவிடப்பட்டதா இந்தியன் 3?..... சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய தகவல்!

கடந்த 1996 ஆம் ஆண்டு சங்கர், கமல் கூட்டணியில் இந்தியன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அரசியலில் உள்ள ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்தியன் 2 திரைப்படம் வசூலில் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் சரிவை சந்தித்தது. கைவிடப்பட்டதா இந்தியன் 3?..... சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய தகவல்!இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். ஆனாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேசமயம் பலராலும் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இடம் பெற்ற இந்தியன் 3 படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இழந்த வெற்றியை திரும்பப் பெற்று தரும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். எனவே இந்தியன் 3 திரைப்படம் திரையரங்குகளில் நிச்சயம் வெளியாகும் என இயக்குனர் சங்கரும் தெரிவித்து இருந்தார். கைவிடப்பட்டதா இந்தியன் 3?..... சமூக வலைதளங்களில் உலா வரும் புதிய தகவல்!ஆனால் சமீபகாலமாக வெளிவரும் தகவல் என்னவென்றால், இந்தியன் 3 படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்கு இயக்குனர் சங்கர், லைக்கா நிறுவனத்திடம் ரூ 20 கோடி கேட்டதாக சொல்லப்படுகிறது. எனவே லைக்கா நிறுவனம் அந்த தொகையை தர மறுத்ததோடு இந்தியன் 3 படத்திலிருந்து விலகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்தியன் 3 திரைப்படத்தின் சில காட்சிகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த படம் கைவிடப்பட்டிருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ