spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?.... அறிவிப்பு எப்போது?

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?…. அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?.... அறிவிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியின் நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் நிச்சயம் கோலிவுட்டில் ரூ.1000 கோடியை கடந்து விடும் என்று நம்புகின்றனர். அதன்படி நெல்சன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி படம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?.... அறிவிப்பு எப்போது?இதற்கிடையில் ரஜினி, கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி வருகின்றன. இது தவிர ரஜினி, ‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக கூறியிருக்கிறார். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார். எனவே ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யாராக இருக்கும்? என்ற கேள்வி தொடர்ந்து சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி, ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஆகையினால் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க தயாராகி வருகிறார்கள்.ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தானா?.... அறிவிப்பு எப்போது? ஏற்கனவே இது தொடர்பான பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் தற்போது ‘ஜெயிலர் 2’ படம் ஏறத்தாழ முடிவடைய இருக்கும் பட்சத்தில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

MUST READ