spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா?

‘தளபதி 69’ படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா?

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 'தளபதி 69' படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா?யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிக பிரமாண்டமாகவும் உருவாக்கி வரும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ள காரணத்தால் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி விஜயின் 69 ஆவது திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கப் போவதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் தளபதி 69 படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக தளபதி 69 படத்தில் மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.'தளபதி 69' படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா? ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இயக்குனர் ஹெச் வினோத், அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் கமலை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். தளபதி 69 படமானது அரசியல் சம்பந்தமான கதைக்களம் என்பதால் வெவ்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நடிகர் விஜய்யும், கமலும் ஒரே படத்தில் நடிப்பார்களா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆகையினால் தளபதி 69 படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ