சியான் 63 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவரது நடிப்பில் தற்போது வீர தீர சூரன் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி சியான் 63 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அடுத்தது இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சியான் 63 படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் சாய் பல்லவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். எனவே பிரியங்கா அருள் மோகன் மற்றும் கே ஜி எஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரிடம் சியான் 63 படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.