spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படத்தின் மூன்றாவது பாடலை பாடியது இந்த நடிகையா?

‘தி கோட்’ படத்தின் மூன்றாவது பாடலை பாடியது இந்த நடிகையா?

-

- Advertisement -

விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். 'தி கோட்' படத்தின் மூன்றாவது பாடலை பாடியது இந்த நடிகையா?சித்தார்த்தா நுனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜய் தவிர சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதேசமயம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படம் 2024 செப்டம்பர் 5ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தி கோட் படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இந்த படத்தின் மூன்றாவது பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தி கோட்' படத்தின் மூன்றாவது பாடலை பாடியது இந்த நடிகையா?இந்தப் பாடலானது விஜய், திரிஷா இருவரும் நடனமாடிய குத்து பாடலாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தி கோட் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறாராம். அடுத்து வரக்கூடியது ஸ்ருதிஹாசன் பாடிய பாடலாக கூட இருக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ