spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ....'தளபதி 69' பட இயக்குனர் இவர்தானா?

விஜயின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ….’தளபதி 69′ பட இயக்குனர் இவர்தானா?

-

- Advertisement -

விஜயின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ....தளபதி 69 பட இயக்குனர் இவர்தானா?விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக டல் அடித்தாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதன்படி தளபதி 69 படத்தை இயக்குனர் அட்லீ அல்லது நெல்சன் இவர்களில் யாரேனும் இயக்குவார் என்று பல தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜயின் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ....தளபதி 69 பட இயக்குனர் இவர்தானா?ஆனால் தற்போது பீட்சா ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

இதற்கிடையில் தளபதி 69 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்திகள் பரவி வந்தது. எனினும் தளபதி 69 படம் சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ