spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அப்டேட்..... 'மகாராஜா' இயக்குனரின் அடுத்த படம் இதுதானா?

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அப்டேட்….. ‘மகாராஜா’ இயக்குனரின் அடுத்த படம் இதுதானா?

-

- Advertisement -

மகாராஜா பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அப்டேட்..... 'மகாராஜா' இயக்குனரின் அடுத்த படம் இதுதானா?கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியானது. இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. அதாவது கதாநாயகனை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார் நித்திலன்.எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அப்டேட்..... 'மகாராஜா' இயக்குனரின் அடுத்த படம் இதுதானா? எனவே இப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. அதாவது தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சீனாவிலும் வெளியாகி ஓடிடியிலும் மகுடம் சூடியது. இதைத் தொடர்ந்து நித்திலன் சாமிநாதன், தனுஷ், அஜித் போன்ற நடிகர்களிடம் கதை சொன்னதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அப்டேட்..... 'மகாராஜா' இயக்குனரின் அடுத்த படம் இதுதானா?இந்நிலையில் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், மகாராஜா இரண்டாம் பாகத்திற்கான கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி இருப்பதாகவும், மகாராஜா 2 தொடர்பான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ