Homeசெய்திகள்சினிமாபிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்!

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்!

-

- Advertisement -

நடிகை ஜான்வி கபூர் தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்!இவர் கடைசியாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்தது இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர், தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்!

அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் ஈரம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஆதி, நந்தா, சரண்யா மோகன், சிந்து மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தண்ணீரை மையமாக வைத்து ஒரு சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு ஈரம் திரைப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஜான்வி கபூர்!அதில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்க இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ