ஜெயம் ரவி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நயன்தாரா கூட்டணி ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ‘இறைவன்’ படத்தில் இணைந்துள்ளது.

இப்படத்தை வாமனன், மனிதன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


