Homeசெய்திகள்சினிமாபா.ரஞ்சித் தயாரிப்பில் கள்ளிப் பால்ல ஒரு டீ... முன்னோட்டம் வெளியானது...

பா.ரஞ்சித் தயாரிப்பில் கள்ளிப் பால்ல ஒரு டீ… முன்னோட்டம் வெளியானது…

-

- Advertisement -

பா.ரஞ்சித் தயாரித்துள்ள கள்ளில் பால்ல ஒரு டீ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தங்கலான் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். நடிகர் விக்ரம் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.

we-r-hiring
இப்படம் கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு ஏற்பட்ட விபத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் பா.ரஞ்சித் ஆர்வம் காட்டி வருகிறார். நீலம் புரடொக்சன்ஸ் என்ற பெயரில் சிறந்த படங்களை அவர் தயாரித்து வருகிறார். அந்த வகையில், பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கள்ளிப் பால்ல ஒரு டீ என்ற படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஆந்தாலஜி படமாக இது உருவாகி இருக்கிறது. 4 பெண்கள் சேர்ந்து இந்த படத்தை இயக்கி இருக்கின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

MUST READ