Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப்.... ஷூட்டிங் எப்போது?

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப்…. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப்.... ஷூட்டிங் எப்போது?கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு 36 வருடங்கள் கழித்து தற்போது மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளியானது. நாயகன் திரைப்படமானது இந்திய அளவில் சிறந்த படங்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்துள்ள படம் என்ற காரணத்தால் தக் லைஃப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் மணிரத்னம், ஏ ஆர் ரகுமான் காம்போ இணைந்தால் அது ஒரு தனி ரகமாக இருக்கும். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப்.... ஷூட்டிங் எப்போது?

கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகளை அடுத்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ஐந்து முதல் ஆறு மாதத்திற்குள் இந்த படத்தை முடித்துவிட்டு 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை அபிராமி மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைய உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ