spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று தொடங்கும் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' பட ஷூட்டிங் ..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்று தொடங்கும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ பட ஷூட்டிங் ….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

இன்று தொடங்கும் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' பட ஷூட்டிங் ..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், தற்போது சங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898AD படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் எச் வினோத் இயக்கத்தில் KH233 படத்திலும், அன்பறிவு மாஸ்டர்கள் இயக்கத்தில் KH237 படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் கமல்ஹாசன். தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். மாஸான ஆக்சன் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் உடல் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தனர்.

we-r-hiring

அதைத்தொடர்ந்து தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 22 ஆம் தேதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ