- Advertisement -
இந்தியன் 2 புரமோசன் பணிகளுக்காக படக்குழுவினர் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
Team #Indian2 at Singapore for Promotions!
Ulaganayagan, SJ Suryah, Sid
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 28, 2024