spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்'..... எச். வினோத்தை வாழ்த்திய கமல்ஹாசன்!

‘சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’….. எச். வினோத்தை வாழ்த்திய கமல்ஹாசன்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் எச். வினோத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898AD படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

we-r-hiring

இதற்குப் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை  இயக்கிய எச் வினோத் இயக்கத்தில் தனது 233 வது படத்தில் நடிக்க இருக்கிறார். ‘KH233’ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன் மற்றும் R.மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். இது சம்பந்தமான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் எச். வினோத் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச் வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கமல்ஹாசனும் எச் வினோத்தும் இணைந்து இருக்கின்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

MUST READ