Homeசெய்திகள்சினிமாநடிகை கீர்த்தி சுரேஷுக்கு திடீர் திருமணம்?... ரசிகர்கள் குழப்பம்...

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திடீர் திருமணம்?… ரசிகர்கள் குழப்பம்…

-

2015 ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பன்மொழி நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியத் திரையுலகில் நீண்ட தூரம் வந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால், ஜெயம் ரவி போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் நடித்ததோடு மட்டுமல்லாமல், ‘மகாநடி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பு பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார். நடிகை என்றாலே காதல், கல்யாணம் உள்ளிட்ட கிசுகிசுக்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியுமா என்ன? கீர்த்தி சுரேஷும் அதற்கு விதிவிலக்கல்ல. இடையில் கூட அனிருத்துடன் கீர்த்தி டேட்டிங் செய்து வருவதாக பல செய்திகள் வெளியாகி பின்னர் அதை மறுக்கப்பட்டது. இறுதியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் சைரன். இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருப்பார். தமிழில் ரகு தாத்தா, கன்னிவெடி, ரிவால்டர் ரீதா உள்பட பல படங்கள் கைவசம் உள்ளன. மேலும், இந்தியிலும் தெறி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக மீண்டும் தகவல் வெளியாகி உள்ளது. தன் நீண்ட கால நண்பர் ஒருவரை திருமணம்செய்து கொள்ள உள்ளதாகவும், திருமண நேரம் நெருங்கும்போது அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், நகைக்கடை உரிமையாளர் அவர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

MUST READ