Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'கிங்ஸ்டன்'.... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

கிங்ஸ்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'கிங்ஸ்டன்'.... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கூட்டணி மீண்டும் கிங்ஸ்டன் எனும் திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மேலும் யோகி பாபு, ஆண்டனி, இளங்கோ குமரவேல் மற்றும் பலர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் திவ்யபாரதியுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். பான் இந்திய அளவில் உருவாகும் இந்த படத்தினை கமல் பிரகாஷ் இயக்குகிறார். இந்த படத்தை பாரலல் யுனிவர்ஸ் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அடுத்தது கோகுல் பினாய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஜி.வி. பிரகாஷே இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'கிங்ஸ்டன்'.... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் சிவகார்த்திகேயன்! ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜனவரி 6) மாலை 6.01 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ