Homeசெய்திகள்சினிமாஹாப்பி பர்த்டே திருநாவுக்கரசு..... வித்தியாசமாக விஷ்ணு விஷாலை வாழ்த்திய லால் சலாம் படக்குழுவினர்!

ஹாப்பி பர்த்டே திருநாவுக்கரசு….. வித்தியாசமாக விஷ்ணு விஷாலை வாழ்த்திய லால் சலாம் படக்குழுவினர்!

-

நடிகர் விஷ்ணு விஷாலின் 45 வது பிறந்தநாள் இன்று.

விஷ்ணு விஷால், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவரின் அறிமுக படமே இவரின் வெற்றிக்கு முதல் படியாக அமைந்தது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்றார். அதைத்தொடர்ந்து இவர் நடித்த முண்டாசுப்பட்டி நீர்ப்பறவை உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இவர் குறுகிய காலகட்டத்தில் திரையுலகில் தனக்கான அடையாளத்தை நிலை நாட்டியவர்.இதைத்தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களின் மூலம் தனகென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். இவராக பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு அட்டகாசமான கதை காலங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்து வருகிறார். மேலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் லால் சலாம் படக் குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரமான திருநாவுக்கரசு என்ற பெயரை குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர்கள் அனைவரும் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

MUST READ