Homeசெய்திகள்சினிமாநடிகை மீனாட்சி சௌத்ரியின் அடுத்த படம்.... பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் ஒப்பந்தம்!

நடிகை மீனாட்சி சௌத்ரியின் அடுத்த படம்…. பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் ஒப்பந்தம்!

-

- Advertisement -

நடிகை மீனாட்சி சௌத்ரி பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகை மீனாட்சி சௌத்ரியின் அடுத்த படம்.... பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் ஒப்பந்தம்!நடிகை மீனாட்சி சௌத்ரி வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராவார். இவருக்கு தற்போது தொடர்ந்து பல பல வாய்ப்புகள் கிடைத்து வர அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன், விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயரையும் புகழையும் பெற்று இருக்கிறார். தவிர மட்கா, சங்கராந்திகி வஸ்துன்னம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இன்னும் சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் மீனாட்சி சௌத்ரி. நடிகை மீனாட்சி சௌத்ரியின் அடுத்த படம்.... பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் ஒப்பந்தம்!இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்த படத்தை கார்த்திக் தண்டு இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ