spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

ஆர்.ஜே. பாலாஜி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!அதைத்தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தையும் இயக்கி நடித்திருந்தார். அடுத்ததாக மாசாணி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் ஆர் ஜே பாலாஜி. அடுத்ததாக இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!அதன்படி இந்த படத்தை பா. ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் என்பவர் படத்தை இயக்க இருப்பதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்திற்கு சொர்க்க வாசல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ