Homeசெய்திகள்சினிமாநயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை!

நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை!

-

- Advertisement -

1970 காலகட்டங்களில் இருந்து தமிழ் திரை உலகில் கே ஆர் விஜயா, ரம்யா கிருஷ்ணன், ரோஜா, மீனா போன்றோர் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தனர். நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை!அவர்களைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தில் அம்மனாக நடித்து பெயர் பெற்றார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் நயன்தாரா. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை திரிஷா, மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தில் அம்மனாக நடிக்கப் போகிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை அம்மனாக நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை!அதன்படி நடிகை அனுஷ்கா புதிய படம் ஒன்றில் அம்மனாக நடிக்கப் போகிறாராம். ஏற்கனவே இவர் பாகுபலி படத்திற்குப் பிறகு பெரிய அளவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். எனவே இனிவரும் நாட்களில் அனுஷ்கா அம்மனாக நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நடிகை அனுஷ்கா ஏற்கனவே பஞ்சமுகி போன்ற படங்களில் அம்மனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ