நடிகர் சூர்யா உடன் முழுநீள படத்திற்காக இணைய இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
அந்தப் படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்றினார். ஆனால் அந்த 10 நிமிட காட்சிக்கு திரையரங்கள் முழுவதும் அலறின.
அதையடுத்து சூர்யாவின் மார்க்கெட் எங்கேயோ எகிறியது. ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து தனி திரைப்படம் இயக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விருது விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் சூர்யாவுடன் முழு நீள திரைப்படம் ஒன்றுக்காக இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசி அவர் “ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக சூர்யா சாருடன் இரண்டு நாட்கள் மட்டுமே பணிபுரிய முடிந்தது. இதனை அடுத்து 150 நாட்கள் படபிடிப்பு நடத்தக்கூடிய வகையில் அவருடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வருடம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ‘இரும்புக்கை மாயாவி’ என்ற படத்தில் லோகேஷ் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் பேசி வந்தன. ஆனால் அந்த படம் குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால் இந்த புதிய பட அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் நகர் தற்போது விஜய் நடிப்பில் லியோ(Leo) படத்தை இயக்கி வருகிறார்.