spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!நடிகர் பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமானவர். அதன் பின்னர் இவர், தொடர்ந்து பான் இந்திய படங்களில் நடித்து பெயர் பெற்று வருகிறார். தற்போது தி ராஜாசாப், கண்ணப்பா, சலார் 2 ஆகிய பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரபாஸ். இதற்கிடையில் தான் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறார் என கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தகவல் வெளியானது.

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் கைதி 2 போன்ற படங்களை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். எனவே லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்திற்குப் பிறகு எந்த படத்தை இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... விரைவில் வெளியாகும் அறிவிப்பு!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போட்டி போடுவதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அப்டேட் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கப் போகிறார் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ