லூசிபர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன் இதனை இயக்கியிருந்தார். பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமே பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன்படி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெயரை பெற்றது. இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் மோகன் நாளுடன் இணைந்து விவேக் ஓபராய் , மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
We start rolling 🎬 as #L2E – Empuraan hits the set today! 🌼✨
Malayalam | Tamil | Telugu | Kannada | Hindi@mohanlal @PrithviOfficial #MuraliGopy #Subaskaran @LycaProductions @gkmtamilkumaran @antonypbvr @aashirvadcine @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4… pic.twitter.com/J1ECQnsFYo
— Lyca Productions (@LycaProductions) October 5, 2023

லூசிபர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லூசிபர் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரித்விராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் லைக்கா நிறுவனம் ‘எம்புரான்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள லூசிபர் 2 படத்தை
படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று லூசிபர் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.