மாதவன் நடிக்கும் டெஸ்ட் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் தற்போது இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். இந்த வகையில் இவர் தமிழில் ‘அதிர்ஷ்டசாலி’ போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ஹிசாப் பராபர் என்ற காமெடி திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் டெஸ்ட் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் மாதவன். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சசிகாந்த் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. என்ன நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.