spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஏகே 64' படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்.... நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

‘ஏகே 64’ படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்…. நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

ஏகே 64 படத்தில் முக்கிய பிரபலங்கள் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.'ஏகே 64' படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்.... நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

அஜித்தின் அடுத்த படமாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் ஏகே 64. அஜித்தின் 64வது படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ஏற்கனவே அஜித் – ஆதிக் கூட்டணி ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்திருந்த நிலையில் இந்த கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. 'ஏகே 64' படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்.... நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தில் மோகன்லால், ஶ்ரீலீலா, சுவாசிகா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. அதே சமயம் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026 ஜனவரி மாதத்திற்குள் வெளியாகும் என அஜித் அப்டேட் கொடுத்துள்ளார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த படம் தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தான் சமீப காலமாக இந்த படத்தில் வேறொரு டாப் தமிழ் நடிகரும் நடிக்கப் போகிறார் என்று பேச்சு அடிபடுகிறது. அதன்படி விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 64' படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்.... நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!இது தவிர பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அடுத்தது பிரபல டோலிவுட் ஹீரோ ஒருவரும் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அத்துடன் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (நவம்பர் 13) வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற அடுத்தடுத்த தகவல்கள் ஏகே 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ