இயக்குனர் மணிரத்னம், நடிகர் சிம்பு குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தக் லைஃப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை (ஜூன் 5) திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகிறது என்றும் இந்த படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம், நடிகர் சிம்பு குறித்து பேசி உள்ளார்.
#ManiRatnam Recent
– #SilambarasanTR is the right choice for the character.
– I am so happy that he done this role.#ThugLifepic.twitter.com/OPQwiiGp1i— Movie Tamil (@MovieTamil4) June 4, 2025
அதன்படி அவரிடம், தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கு சிம்பு தான் உங்களுடைய முதல் தேர்வா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மணிரத்னம், “அவர்தான் சரியான தேர்வு. அவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தக் லைஃப் படத்தின் டிரைலரில் காட்டப்பட்ட கமல் – சிம்பு மோதிக்கொள்ளும் காட்சி படத்தில் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.