Homeசெய்திகள்சினிமாதமிழ் ரசிகர்களும் கொண்டாடும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

தமிழ் ரசிகர்களும் கொண்டாடும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’…. ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சமீப காலமாக வெளியாகும் மலையாள திரைப்படங்கள் தமிழ் படங்களை தூக்கி சாப்பிட்டு தமிழ்நாட்டிலும் அதிக வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழ் ரசிகர்களும் கொண்டாடும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!அதன்படி ஏற்கனவே வெளியான புலி முருகன், லூசிபர், 2018 போன்ற படங்கள் தமிழில் ரசிகர்கள் மத்தியிலும் பேராதரவை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படமும் கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எமோஷனல் கலந்த கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தை பரவா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சுசின் ஷியாம் இசையமைக்க சைஜூ ஹாலித் ஒளிப்பதிவு செய்து இருந்தார். படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், லால் ஜூனியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகக்குறைந்த நாட்களில் அதிவேகமாக 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த படம் தமிழகத்தில் மட்டுமே 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 35 நாட்களைக் கடந்தும் இப்படம் இன்று வரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் ரசிகர்களும் கொண்டாடும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

இந்நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ