மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் வாழை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்ததாக இவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அடுத்ததாக மாரி செல்வராஜ் ரஜினி மற்றும் கார்த்தி ஆகியோரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்களை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் மாறி செல்வராஜ் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார்.
இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2024 ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் வாழை படத்தின் முதல் பாடல் நாளை (ஜூலை 18) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -