இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பின்னர், காதல் கொண்டேன், 7G Rainbow காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் தொடர் வெற்றியை கண்டதால் அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

அதில் காதல் கொண்டேன் திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
அதில் குறிப்பாக, 7G Rainbow காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட இயக்கியரான இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவார். இந்த வகையில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதன்படி புஷ்பா படத்தில் நடத்த நடிகர் சுனில் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தில் செல்வராகவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Happy to share screen-space with Pushpa fame #Sunil and dear @iYogiBabu in my next
Produced by @ga_harikrishnaa #DurgaDeviHarikrishnan's @MomentEntertain
Directed by @dirranganathan@onlynikil
— selvaraghavan (@selvaraghavan) May 4, 2023