Homeசெய்திகள்சினிமாமோகன்லாலின் 'மலைக்கோட்டை வாலிபன்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

மோகன்லால் தற்போது வ்ருஷபா, நேரு உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் மலைக்கோட்டை வாலிபன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்குகிறார். இதில் மோகன்லாலுடன் இணைந்து சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரசாந்த் பிள்ளை இதற்கு இசை அமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி மாதத்தில் ராஜஸ்தானில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ