spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமரன் படத்தில் சர்ச்சை காட்சி... சிவகார்த்திகேயனுக்கு வந்த புதிய சிக்கல்...

அமரன் படத்தில் சர்ச்சை காட்சி… சிவகார்த்திகேயனுக்கு வந்த புதிய சிக்கல்…

-

- Advertisement -
சிவகார்த்திகேயனின் அமரன் பட டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், படத்திற்கு தடை விதிக்கக்கோரி புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி ஹிட் கொடுத்து வருகிறார். சிவா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வௌியானது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி.

தற்போது இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைத்து டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
we-r-hiring

இந்நிலையில், அமரன் படத்தின் டீசரால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் இஸ்லாமிய சிறுவனை பிடித்து என்ன வேண்டும் என கேட்க, அவர் சுதந்திரம் வேண்டும் என கூறுகின்றனர். இதற்கு தமிழகத்தில் இஸ்லாம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் உள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாாக சித்தரிக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டி, படத்தை தடை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ