உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படத் தொடரின் புதிய பாகமான ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) திரைப்படத்தின் இறுதி ட்ரெய்லர் (Final Trailer) அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“I’m Spider-Man!” – மிரட்டும் ட்ரெய்லர்
வெளியாகியுள்ள இந்த இறுதி ட்ரெய்லரில், கதாநாயகன் டாம் ஹாலாண்ட் “I’m Spider-Man” என்று கம்பீரமாகக் கூறும் காட்சியும், மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக, முற்றிலும் புதிய திருப்பங்கள் மற்றும் சவால்களுடன் இக்கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது ட்ரெய்லர் மூலம் தெளிவாகிறது. இப்படத்தில் முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் ஹாலாண்ட் (Tom Holland) கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக செண்டயா (Zendaya) மற்றும் பல முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூலை 31-ல் பிரம்மாண்ட ரிலீஸ்
ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைத்து வரும் ஸ்பைடர்மேன் வரிசையில், இந்த புதிய பாகமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

