- Advertisement -
MY3 வெத்தொடரின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
சாந்தனு, ஹன்சிகா நடிப்பில் MY3 என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதனை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். இதில் சாந்தனு, ஹன்சிகாவுடன் இணைந்து முகென் ராவ், ஜனனி, அஸ்னா ஜவேரி மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோபோடிக்
காதல் கதை களத்தில் இந்த தொடர் உருவாகியுள்ளது. கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் MY3 ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.