ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கம் ஜெயிலர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது 170 ஆவது படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது மேலும் இதில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
தற்போது தலைவர் 170 படத்தின் புதிய அப்டேட்டாக நடிகர் நானி படத்தில் கேமியோ
ரோலில் நடிக்க இருப்பதாகவும் அவரது காட்சிகள் 20 நிமிடங்கள் இருக்கும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நானி ஹாய் நான்னா எனும் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.