Homeசெய்திகள்சினிமாவிஜய் அரசியலுக்கு போன அப்புறம் சினிமா எப்படி இருக்கு? - கார்த்தியின் நறுக்குத் தெறித்த பதில்!

விஜய் அரசியலுக்கு போன அப்புறம் சினிமா எப்படி இருக்கு? – கார்த்தியின் நறுக்குத் தெறித்த பதில்!

-

- Advertisement -

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் விமரிசையாக வெளியிடப்பட்டது.விஜய் அரசியலுக்கு போன அப்புறம் சினிமா எப்படி இருக்கு? - கார்த்தியின் நறுக்குத் தெறித்த பதில்!

முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த படக்குழுவினர், பின்னர் திருநெல்வேலிக்கு வருகை தந்து டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

we-r-hiring

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சர்தார் 2’
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி ஆகியோருடன், இரண்டாம் பாகத்தில் புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்குச் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இது அவரது இசையமைப்பில் வெளியாகும் 100-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சர்தார் 2’ வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என மொத்தம் 5 மொழிகளில் பான்-இந்தியா படமாகத் திரைக்கு வரவுள்ளது.விஜய் அரசியலுக்கு போன அப்புறம் சினிமா எப்படி இருக்கு? - கார்த்தியின் நறுக்குத் தெறித்த பதில்!

செய்தியாளர்கள் சந்திப்பில் கார்த்தி வெளிப்படை
செய்தியாளர்கள் சந்திப்பில், “கைதி, சர்தார் தவிர்த்து உங்கள் பிற படங்கள் பெரிய அளவில் பேசப்படுவதில்லையே?” என்ற கேள்விக்கு கார்த்தி அளித்த பதில்,  “பேசப்படவில்லையா? சமீபத்தில் ‘மெய்யழகன்’ என்ற படத்தில் நடித்தேன்; அதை அனைத்துத் தரப்பினரும் பாராட்டினார்கள். ஒவ்வொரு படமும் ஒரு விதமான அனுபவம். கலைஞர்கள் குழந்தைகள் போன்றவர்கள். பெற்றோரை மகிழ்விக்க குழந்தைகள் என்ன செய்வார்களோ, அதைத் தான் நாங்களும் செய்கிறோம். நன்றாகப் பண்ணும்போது கொண்டாடுவார்கள், சரியாக வரவில்லை என்றால் விமர்சிப்பார்கள். இரண்டையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.”

உளவாளிகள் மற்றும் சமூக கருத்து
தொடர்ந்து உளவாளிகள் குறித்துப் பேசிய கார்த்தி, “பொதுவாக உளவாளிகளுக்கு இல்லறமும் கிடையாது, கல்லறையும் கிடையாது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், எந்தவித பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் நாட்டிற்குத் தேவையானதைச் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் நம் கண்களுக்கே தெரியமாட்டார்கள்” என்றார். மேலும், இப்படத்தில் சமூகக் கருத்துகள் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு, “இயக்குநர் மித்ரன் படங்களில் கண்டிப்பாக ஒரு சமூகப் பார்வை இருக்கும். அதை மக்களுக்குப் பொழுதுபோக்கோடு சேர்த்துச் சொல்வதில் அவர் வல்லவர். முதல் பாகத்தைப் போலவே ‘சர்தார் 2’ படத்திலும் ஒரு பெரிய குண்டை வைத்திருக்கிறார்” எனப் புன்னகையோடு தெரிவித்தார்.விஜய் அரசியலுக்கு போன அப்புறம் சினிமா எப்படி இருக்கு? - கார்த்தியின் நறுக்குத் தெறித்த பதில்!

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின் திரையுலகின் நிலை குறித்துக் கேட்டபோது, “நீங்கள்தான் பார்த்துச் சொல்ல வேண்டும், திரையுலகம் நன்றாகத் தான் இருக்கிறது” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். தற்போது தீவிரப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழுவினருக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கார்த்தியின் Sardar 2-க்கு சூர்யா கொடுத்த பாராட்டு! “அவன் ஒரு உண்மையான நடிகன்” – வைரலாகும் சகோதர பாசம்

MUST READ