- Advertisement -
அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள போர் படத்திலிருந்து புதிய பாடல் நாளை வெளியாகிறது.
கோலிவுட்டில் இன்றைய நேரத்தில் அதிக ரசிகைகளை தன் பக்கம் கொண்டிருக்கும் இரண்டு இளம் நடிகர்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம். அர்ஜூன் தாஸின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமாகி, அடுத்தடுத்து பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
மலையாளத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் மற்றொரு நாயகன் காளிதாஸ் ஜெயராம். பாவக்கதைகள் படத்தில் திருநங்கையாக நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் காளிதாஸ். இதைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் போர்.
'#NanpagalNeram' Mesmerizing second track from #POR releasing Tomorrow🎶
March 1st release in theatres !!
pic.twitter.com/fJm4D57Gwh— AmuthaBharathi (@CinemaWithAB) February 22, 2024
