நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கும் நடிகை நயன்தாரா மலையாளத்தில் டியர் ஸ்டுடண்ட்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷுக்கு அக்காவாக நடித்திருக்கிறார் நயன்தாரா. அடுத்தது மகாராணி, தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் நயன்தாராவின் லைன் அப்பில் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் ஆவணப்படம் இன்று (நவம்பர் 18) நயன்தாராவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
அதன்படி நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ராக்காயி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இந்த படம் போர் தொடர்பான கதைக்களம் போல் தெரிகிறது. மேலும் இதில் நயன்தாரா ஒரு கைக்குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். அத்துடன் மிரட்டலான லுக்கில் ஆக்சன் காட்சிகளில் தெறிக்க விட்டுள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்தது இந்த ராக்காயி படத்தினை ட்ரம் ஸ்டிக்ஸ் ப்ரோடக்ஷன் நிறுவனமும் மூவி வெர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. இப்படத்தினை செந்தில் நல்லசாமி எழுதி இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்க கௌதம் ராஜேந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.