Homeசெய்திகள்சினிமாபிரபல குளிர்பான நிறுவனத்துடன் கைகோர்த்த நடிகை நயன்தாரா

பிரபல குளிர்பான நிறுவனத்துடன் கைகோர்த்த நடிகை நயன்தாரா

-

நடிப்பு மட்டுமன்றி பிசினஸிலும் ஆர்வம் செலுத்தி வரும் முன்னணி நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 20-ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றி வரும் நயன்தார், விஜய், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி மற்றும் வளரும் இளம் நாயகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன், கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நடிப்பு மட்டுமன்றி தற்போது குடும்பம், குழந்தைகளை பார்க்கவும் நேரம் செலவிட்டு வருகிறார் நயன்தார். இது தவிர, ரவுடி பிக்சர்ஸ் என நிறுவனம் தொடங்கி தயாரிப்பிலும் இறங்கினார். இதைத் தொடர்ந்து லிப் பாம் கம்பெணி, நயன் ஸ்கின், டிவைன் புட்ஸ் மற்றும் பெமி நயன் என பல நிறுவனங்களை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா பிரபல குளிர்பான நிறுவனமான, ஸ்லைஸ் கம்பெனியுடன் கைகோர்த்துள்ளார். அந்நிறுவத்தின் விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை ஒட்டி வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ