Homeசெய்திகள்சினிமா'SK21' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து பிரமித்த நெல்சன்.... வைரலாகும் பதிவு!

‘SK21’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து பிரமித்த நெல்சன்…. வைரலாகும் பதிவு!

-

- Advertisement -

'SK21' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து பிரமித்த நெல்சன்.... வைரலாகும் பதிவு!நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு தமிழகத்தில் பேராதரவு கிடைத்து வருகிறது.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த SK21 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் இதில் வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்னும் பத்து சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது எனவே விரைவில் முடிவடைய உள்ள SK21 படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.'SK21' படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து பிரமித்த நெல்சன்.... வைரலாகும் பதிவு!

இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலிப் குமார், SK 21 படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” SK 21 படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்தேன். அருமையாக இருக்கிறது. இந்த உணர்ச்சிகரமான பயணத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை இந்த உலகமே பார்க்கும் வரை காத்திருக்க முடியாது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது கைத்தட்டல்” என்று பதிவிட்டுள்ளார்.

நெல்சன் வெளியிட்டுள்ள இந்த பதிவு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ