Homeசெய்திகள்சினிமாசரத்குமார், அமிதாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 'பரம்பொருள்'....... ட்ரெய்லர் வெளியீடு!

சரத்குமார், அமிதாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பரம்பொருள்’……. ட்ரெய்லர் வெளியீடு!

-

சரத்குமார் , அமிதாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கியுள்ளார். இதில் சரத்குமார் மற்றும் அமிதாஷுடன் இணைந்து கஷ்மிரா பர்டேசி நடித்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். எஸ் பாண்டி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிலை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரில் ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் கவனம் ஈரித்துள்ளது.

MUST READ