spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'பிச்சைக்காரன்' காம்போ இஸ் பேக்.... டைட்டில் என்னென்னு தெரியுமா?

‘பிச்சைக்காரன்’ காம்போ இஸ் பேக்…. டைட்டில் என்னென்னு தெரியுமா?

-

- Advertisement -

‘பிச்சைக்காரன்’ பட கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.'பிச்சைக்காரன்' காம்போ இஸ் பேக்.... டைட்டில் என்னென்னு தெரியுமா?

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ‘மார்கன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.'பிச்சைக்காரன்' காம்போ இஸ் பேக்.... டைட்டில் என்னென்னு தெரியுமா? இதற்கிடையில் இவர், சசி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டானார். அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த கூட்டணி மீண்டும் இணையப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. விஜய் ஆண்டனி- சசி கூட்டணியிலான புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 'பிச்சைக்காரன்' காம்போ இஸ் பேக்.... டைட்டில் என்னென்னு தெரியுமா?அதன்படி தற்போது இந்த புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு நூறுசாமி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘நூறுசாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா’ என்ற பாடல் வரியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2026 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து திஷான், சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ