பிசாசு 2 படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த 2014 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு எனும் திரைப்படம் வெளியானது. வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின், ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலேயே ராக்ஃபோர்ட் என்டேர்டெயிமெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் ஆண்ட்ரியா உடன் இணைந்து ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நீண்ட நாட்களாக இந்த படம் ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஆண்ட்ரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிசாசு 2 திரைப்படம் 2025 இல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படம் 2025 மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -