spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன் மீது தவறல்ல... விட்டுவிடுங்கள் ப்ளீஸ்... கதறியும் அல்லு அர்ஜூனை கைது செய்த போலீஸ்..!

என் மீது தவறல்ல… விட்டுவிடுங்கள் ப்ளீஸ்… கதறியும் அல்லு அர்ஜூனை கைது செய்த போலீஸ்..!

-

- Advertisement -

சந்தியா தியேட்டர் நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீ-ரிலீஸின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண் ஒருவர் உயிரை இழந்தார். இச்சம்பவம் குறித்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்து சிக்கட்பள்ளி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.என் வாழ்நாளில் இந்த கிளைமாக்ஸ் தான் கடினமானது.... 'புஷ்பா 2' படம் குறித்து அல்லு அர்ஜுன்!

ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ படத்தின் திரையிடலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அல்லு அர்ஜுன் கடந்த டிசம்பர் 11ம் தேதி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவர்கள் அங்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு நடந்தபோது, ​​அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி போலீசார் எழுதிய எஃப்ஐஆரை ரத்து செய்ய மனு தாக்கல் செய்தார்.

we-r-hiring

இந்த சம்பவத்தில் பெண் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. ஒரு படம் ரிலீஸாகும் போது தியேட்டருக்கு வருவது இயல்புதான், ஆனால் இதற்கு முன் பலமுறை தியேட்டருக்கு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. தியேட்டர் அருகே வருவதாக தியேட்டர் நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் முன்பே தெரிவித்திருந்தேன். என்னைப்பொறுத்தவரை என்மீது, எந்த அலட்சியமும் இல்லை, குற்றச்சாட்டுகள் தவறானவை. https://x.com/ANI/status/1867471906506780701

நான் வந்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது என்று கூறுவது ஏற்புடையதல்ல. எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வது நீதித்துறையின் துஷ்பிரயோகம். இந்த விவகாரத்தால் எனது நற்பெயருக்கும், கவுரவத்துக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, கைது உள்ளிட்ட விசாரணை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

MUST READ